tamilnadu

img

திருமண வரவேற்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சிவக்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.தனலட்சுமி ஆகியோரின் இல்லத் திருமண வரவேற்பு விழா மடப்பட்டில் நடைபெற்றது. கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மணமக்கள் எஸ்.இலக்கியா, கஜேந்திரன் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, திமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.