tamilnadu

img

எச்சரிக்கை

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்களை வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், உத்தரவை மீறி மதுக் கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  மதுக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்களை வழங்கக்கூடாது என்ற எச்சரிக்கை சுவரொட்டியை ஒட்டுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 122 மதுக் கடைகளின் முன் எச்சரிக்கை சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் மது விலக்கு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.