tamilnadu

டாடா ஏசி பயணம்: விபத்தில் பள்ளிக்குழந்தைகள் படுகாயம்

 திருக்கோவிலூர் ஜூன் 11- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர் களை ஏற்றிச் செல்ல தேவையான அளவிற்கு அரசுப் பேருந்து கள் விடப்பட வில்லை. அவ்வழியாக வந்த டாடா ஏசி வாக னத்தை கைகாட்டி நிறுத்தி ஏறி வந்துள்ளனர். அதே ஊரைச்  சேர்ந்த வர்கீஸ் (28) என்பவருக்குச் சொந்தமான அந்த வாக னத்தில் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் (27) என்பவர் ஓட்டி வந்தார். வரும் வழியில் பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவ தற்காக இடது ஓரமாக டாடா ஏசி ஓட்டுனர் வாகனத்தை செலுத்தி  உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாக னம் இடது புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் மாணவர்கள்  படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி வழியாக சென்ற பொது  மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் கலைவாணி தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக கல்வி அமைச்சர் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூடுதலான மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வாயால்  வடை சுட்டாலும்; கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்குச்  செல்ல போதுமான அளவிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு  பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது வெளிப்படை யான விஷயமாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக  இதில் கவனம் செலுத்தி போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தேவையான அளவு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்  டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.