tamilnadu

img

வாக்குகேட்டு தீவிர பிரச்சாரம்

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் கிருத்துவ தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கோரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொருப்பாளர் சஞ்சய்தத், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்குகள் கேட்டு செங்கம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் எம்.சிவக்குமார், ஏ.லட்சுமணன், ஏ.நடராஜன்,பி.கணபதி, காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;