tamilnadu

ஊரை ஒன்றுபடுத்தும் பொதுமக்கள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை, டிச. 5-  விழுப்புரம் அருகேயுள்ள கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சி யாகவும், ஒரே வருவாய் கிராமமாகவும் மாற்றி விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரியும், ஊரின் பெயரை அரசு ஆவ ணத்தில் சேர்க்க வலியுறுத்தி யும்  உள்ளாட்சித் தேர்தலை  புறக்கணித்து, அரசு ஆவ ணங்களை ஒப்படைப்போம்  என்று கூறி கருப்புக்கொடி ஏந்தி கிராம பொதுமக்கள் டிசம்பர் 5 வியாழனன்று போராட்டம் நடத்தினர். தமிழக அரசு கடந்த ஜன வரி 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பில் கரு வேப்பிலைபாளையம் கிரா மம் பாதி ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும் - பாதி ஊர்  விழுப்புரம் மாவட்டம் ஆக வும் பிரிந்தது. இதனால்  இந்த  கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த வீட்டின்  முன்வாசல் கள்ளக் குறிச்சி மாவட்டமாகவும், பின்வாசல் விழுப்புரம் மாவட்டமாகவும் பிரிந்தது.  அண்ணன் வீடு விழுப்பு ரம் மாவட்டத்திலும், தம்பி  வீடு கள்ளக்குறிச்சி மாவட் டத்திலும், ஒரே குடும்பத்தில் உள்ள குடும்ப அட்டைகள் இரண்டு மாவட்டத்திலும் பிரிந்தது. ஏற்கனவே இந்த கிராமம் 4 ஊராட்சிகளை சார்ந்தும், 6 வருவாய் கிரா மங்களை சார்ந்தும் இரண்டு  காவல் நிலையம், இரண்டு  ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களும் இரண்டு இரண்டாக பிரிக்  கப்பட்டு இருந்த நிலை யில் தற்போது அரசு அறி வித்துள்ள இந்த அறி விப்பால் மிகுந்த குழப்பத் திற்கும் சிரமத்திற்குள்ளாகி உள்ளதால் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம பொது மக்கள் அரசிடம் ஐயா யிரத்துக்கும் மேற்பட்ட  மனுக்கள் கொடுத்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.  மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற  உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வும் அரசு ஆவணங்களை ஒப்படைக்கப் போவதாக வும் கூறி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.