tamilnadu

காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை. அக். 16- ஐந்தாண்டுகளுக்கு மேல் காதலித்து திரு மணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை  ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் காவல்துறையை வலியுறுத்தி யுள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டம் திருநறுங்குன்  றத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மும்பை யில் தன் சகோதரர் வீட்டில் தங்கி வீட்டு வேலை  செய்து பிழைத்து வந்துள்ளார். இவரின் தாயும், தந்தையும் முன்பே காலமாகி விட்ட தால் சகோதரரின் அரவணைப்பில் இருந்துள்  ளார். திருவிழாக்காலங்களில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் காலத்தில் குன்னத்தூரைச் சேர்ந்த வெள்ளக்குளத்தான் என்பவரின் மகன் ஜேசிபி ஓட்டுநராக உள்ள  சிவா (28) என்பவர் இவருடன் பேசிப் பழகி  வந்துள்ளார். இது காதலாக மலர்ந்து திரு மணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மேலிருப்பு அருகேயுள்ள காட்டுப் புறத்தில் வசிக்கும் சிவாவின் அக்கா வும், மாமாவும் இதில் தலையிட்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என தடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை மீற முடியாத சிவாவும் “என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடி யாது. நீ எனக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தருகிறேன். மும்பைக்கே சென்று  விடு” என அப்பெண்ணைஅடித்து துன்புறுத்தி  மிரட்டி உள்ளார். எனவே இம் மாதம் இரண்டாம் தேதி, வாலி பர் சிவா மீது உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்துள்ளார். காவலர்கள் சிவாவை அழைத்து விசாரித்ததில் இம்மாதம் 24 ஆம் தேதி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டிற்குச் சென்ற சிவா மீண்டும் அப்பெண்ணை அழைத்து அடித்து மிரட்டி உள்ளார். இதனால் கடந்த  வாரம் அப்பெண் விஷம் அருந்தி தற் கொலைக்கு முயன்றுள்ளார். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அப்பெண்ணை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செயலாளர் இ. அலமேலு, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.மோகன், வாலிபர் சங்க துணைச் செயலாளர் ஏ.தங்கமணி ஆகியோர் நேரில் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து சம்ப வம் தொடர்பாக விசாரித்தனர். பின்னர் காவல்துறையினர் உடனடியாக காதலித்து ஏமாற்ற முயலும் சிவாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

;