districts

img

தற்கொலைக்கு தூண்டியவர்களையும் கைது செய்க: மாதர் சங்கம் கோரிக்கை

திருக்கோவிலூர்,ஆக. 28 - பெண் குழந்தையை கொல்ல துன்புறுத்தியதால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத் தில், அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டு மென்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் ரிஸ்வானின் மகள் அப்சா. தஸ்தகீர் என்ப வரை விரும்பினார். அதை அப்சாவின் பெற்றோர்ள் ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு போராட்டங்கள் நடத்தி தாய், தந்தையை சம்ம திக்க வைத்து தஸ்த கீரை திருமணம் செய்து கொண்டார். திரு மணத்திற்குப்பின் கணவர் வீட்டாரால் வரதட்சணை கேட்டு பல்வேறு கொடுமை களுக்கு அப்சா ஆளாக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் அப்ஸா விற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையை ஏற்க மறுத்து தஸ்தகீர் மற்றும் அவ ரது குடும்பத்தினர் துன்பு றுத்தி உள்ளனர். பெண் குழந்தையை கொல்லச் சொல்லி அடித்து சித்ர வதை செய்ததாக கூறப்படு கிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த அப்ஸா, கணவன் வீட்டா ரின் கொடுமைகளை கை பேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் பிறகும் திருக் கோவிலூர் காவல்துறையி னர் அப்ஸாவின் கணவர் தஸ்தகீரை மட்டும் கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ள மாமனார் ஜீலானி, மாமியார் ஷீரின், நாத்தனார்கள் கௌசின், ஷாகிதா, அவரது கணவர் முஸ்டாக்,  கொழுந்தனார் ரப்பானி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் அப்சா வின் வீட்டிற்கு மாதர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.தேவி, துணைத்தலைவர் ஏ.சக்தி, வட்ட செயலாளர் ஏ.லூயிசாமேரி, சிபிஎம் வட்ட செயலாளர் ஏழு மலை உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.. இது தொடர்பாக சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் இ.அல மேலு, செயலாளர் ஏ.தேவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: முதல் தகவல் அறிக்கை யில் பெயர் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்வதோடு அவர்கள் மீது குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். காவல் துறை யின் மெத்தனம் குற்றவாளி கள் தப்பிக்க உதவும். எனவே, மாவட்ட நிர்வாக மும், காவல்துறையும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.