tamilnadu

img

ரத்த தானத்தை வலியுறுத்தி சைக்கிளில் தொழிலாளி விழிப்புணர்வு

விழுப்புரம், ஜன. 7- மேற்குவங்க மாநிலம், `ஹூப்ளி மாவட்டம், ஜோப் தானி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதேவ்ராவுத் (50). அங்குள்ள சணல் பொருள் உற்பத்தி நிறுவன தொழி லாளியாக உள்ளார்.  இவர் நாடு முழுவதும் ரத்ததான விழிப்புணர்வை வலியுறுத்தி சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கோல்கத்தாவில் சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கிய இவர் கொல்கத்தா, ஒடிஸா, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகம் வந்தார். பின்னர் சென்னை, செங்கல்பட்டைத் தொடர்ந்து திங்களன்று விழுப்புரம் வந்தடைந்தார். பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். விழுப்புரத்திலிருந்து, திருச்சி, மதுரை, கன்னியா குமரி வழியாக கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்கிறார். மார்ச் மாதம் கொல்கத்தாவில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்திய ரத்த தான சேவை மையத்தின் உறுப்பின ராக உள்ள அவர், 38 முறை ரத்ததானம் செய்துள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் ரத்த தானம் வழங்கி வரும் நிலையில், தற்போது அவர் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மேற்கொண்டு வரு கிறார். 2020 -ஆம் ஆண்டில் ரத்தம் இல்லாமல், ஒரு உயிர் கூட பிரியக்கூடாது என்பதே இவரது விழிப்பு ணர்வின் நோக்கமாகும்.

;