விருதுநகர், ஜூன் 14- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 156 ஆகும். ஏற்கனவே, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த சின்னப் பேராலி யைச் சேர்ந்த 66 வயது ஆண், 15 வயது சிறுவன், 33 வயது பெண், 10 வயது சிறுமி மற்றும் சென்னையிலிருந்த அருப்புக் கோட்டை அருகே உள்ள பூலாங்கல் பகு திக்கு வந்த 36 வயது பெண், 17 வயது வாலிபர், சிவகாசி துரைநகருக்கு வந்த 25 வயதுடைய பெண், 45 வயதுடைய மற்றொரு பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டது. இதையடுத்து, விருதுநகர் மாவட் டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணி க்கை 164 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப் பட்ட அனைவரும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளனர்.