tamilnadu

img

சிஐடியூ ஆட்டோ சங்க துவக்க விழா

விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்கம், பெயர் பலகை திறப்பு விழா திருக்கோவிலூரில் கிளைத் தலைவர் ஏ.தெய்வீகன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஏ.பிஸ்மில்லா வரவேற்றார். எம்.பன்னீர்செல்வம், ஜி.பாலு, எஸ்.கந்தன், ஆர்.விஜய்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு தெற்கு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் பெயர் பலகையை திறந்து வைத்தார். செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி, துணைச் செயலாளர் ஆர்.ராஜசேகர், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் துரை.சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.வேல்மாறன் வாழ்த்திப் பேசினார்.