உளுந்தூர்பேட்டை, செப். 21- திருநாவலூர் ஒன்றியம் பா.கிள்ளனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி சக்திகள் நடத்திய தாக்குத லில் பாதிக்கப்பட்டவர்களின் மீது போடப் பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் (செப் 20) வெள்ளியன்று கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- செப்டம்பர் 3 ஆம் தேதி பா.கிள்ளனூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பெரும்பட்டு கிரா மத்தைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகளான சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏ.தினேஷ், வி.இந்திராகாந்தி, ஆர்.விஜய குமார் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் 15 பேர் மீது பிணையில் வர முடி யாத பிரிவுகளின் கீழ் திருநாவலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வழக்கு பதியப்பட்டுள்ள வர்களில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள். ஐந்து பேர் சம்பவத்தன்று பிழைப்பிற்காக வெளியூர் சென்று இருந்தவர்கள். இரண்டு பேர் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவ மனையில் உள்ளனர். எனவே முறையான விசாரணை நடத்தி இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்து வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். மேலும், சம்பவம் குறித்து 4ஆம் தேதி கே.ராமலிங்கம் என்பவர் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் 12 பேர் மீது புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத் துள்ள புகாரில் உள்ள 9 முக்கிய குற்றவாளி களின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இச் சம்பவத்தில் ஈடுபடாத ஊர் பகுதியை சேர்ந்த அப்பாவிகள் சிலர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அனு மதிக்கப்பட்டுள்ளபடி தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் தினேசை உயர்தர மருத்துவமனையில் அனு மதித்து சிகிச்சை அளித்திட வேண்டும். பாதிக் கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனை வருக்கும் இச்சட்டத்தின்படி அனுமதிக்கப் பட்டுள்ள நிவாரணங்கள் முழுமையாக கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இம்மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும் அளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.