tamilnadu

img

விருதுநகரில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி 28 அணிகள் பங்கேற்பு

விருதுநகர், ஜன.19- விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடை பெற்றது. இதில், விருதுநகர், இராமநாத புரம், கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்,  கடலூர், வேலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.  இப்போட்டிகளில் சிறப்பாக விளை யாடக் கூடிய 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு தனியாக பயிற்சி முகாம்கள் நடைபெறும். அதில் 18 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர்.  சனிக்கிழமை   இரண்டு மைதானத்தில்  நான்கு பிரிவுகளாக  போட்டிகள் நடை பெற்றன. திங்கள்கிழமை காலை அரை யிறுதிப் போட்டியும், மாலை இறுதிப் போட்டி யும் நடைபெற உள்ளது.

;