tamilnadu

img

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம்

விழுப்புரம், ஏப். 19- மேல்நிலைத்தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டம் கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காட்டைவிட 2.5 விழுக்காடு இந்த ஆண்டு கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜனவரியில் நடைபெற்ற ஆசிரியர் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பதோடு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விழுப்புரம் மாவட்டத் தில் இந்தக் கல்வியாண்டில் (2018-19) மொத்தம் தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 698 மாணவ மாணவியரில் 34 ஆயிரத்து 80 மாணவர் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.85 விழுக்காடு தேர்ச்சி ஆகும்.கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.35 விழுக்காட்டைவிட இது 2.5 விழுக்காடு கூடுதல் தேர்ச்சி விகிதம் ஆகும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியரே கூடுதல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக தமிழ்நாட்டிலேயே கூடுதலான அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்பது குறை கூறும் விதத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெற்றோரின் விழுக் காடு 81.15 ஆக உள்ளது.


கல்வித்துறையை பொறுத்தளவில் புதுச்சேரி, காரைக் கால் உள்ளிட்ட 34 மாவட் டங்களில் விழுப்புரம் மாவட்டம் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 26ஆவது இடத்தில் இருக்கிறது.கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிரியர் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப் பின் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, தேர்ச்சி விகிதம் குறையும் என்று ‘சமூக ஆர்வலர் கள்’ என்ற போர்வையில் உள்நோக்கத்துடன் பலர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கெல்லாம் இத் தேர்ச்சி விகிதத்தில் ஆசிரியர்கள் இப்போலி சமூக ஆர்வலர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.பொது நலனுக்கான தங்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படவில்லை என்பதோடு, போராட்டத்திற்கு முன்பே பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு நடத்தி முடித்து இத்தேர்ச்சி விகிதத்தை மாவட்ட கல்வித் துறை அடைய உதவியுள்ளனர் என்பதும், தங்களின் பணிகளில் மாணவர்களுக் கான கல்வி பணியே முன்னுரிமைப்பணி என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்பதும் உறுதியாகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் கல்விநிலை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என்பது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும், குறிப்பாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப் படை தேவைகள் பெரிய அளவிற்கு நீடிக்கின்ற நிலையிலும் தேர்ச்சி விழுக்காடு கூடுதல் ஆகியுள்ளது என்பது பாராட்டத் தக்கது.

;