tamilnadu

img

போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்அப் புரவுசிங் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் வரும் போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புரவுசிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
வாட்ஸ்அப் பேஸ்புக்போன்ற சமூக வலைதளங்களில் வழியாக போலி செய்திகள் கட்டற்ற வகையில் பரவி வருகிறது. இதைத்தடுக்க பல வகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் அப்பில் புரவுசிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் லென்ஸ் ஐகான் அதாவது தேடு குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மெசேஞ்களை பிரவுசிங் செய்து தகவலின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இந்த வசதிக்காக பிரத்தேகமாக வாட்ஸ்அப் பிரவுசர் எதுவும் வழங்கப்பட வில்லை. மாறாக ஏற்கனவே போனில் உள்ள பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் வாட்ஸ் அப்பில் புரவுசிங் செய்தாலும் நாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிரசரில் தான் முடிவுகள் தெரியவரும்.
இந்த வசதி தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி அயர்லாந்து மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.