சென்னை,ஜன.17- கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்த்தாண்டத்தில் உள்ள வில்சனின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கினர். வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.