tamilnadu

img

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 13- தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள  நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, குமரி  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்பு ரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்  கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களிலும், தென் மாவட் டங்களான சிவகங்கை, விருதுநகர் திண்  டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் வெப்பச்  சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த ஒரு நாள் வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.