தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .