tamilnadu

img

மே தினத்தை முன்னிட்டு வாலிபர், மாதர், மாணவர்கள் இரத்ததானம்

மதுரை, மே 1- அரசு மருத்துவமனைகளில் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் சேவையில்  மே 1 உலக தொழிலாளர்  தினத்தை முன்னிட்டு வாலிபர், மாதர், மாண வர்கள் மற்றும் பலர் இரத்ததானம் வழங்கினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சிஐடியு  தமிழ்நாடு மருந்து - விற்பனை பிரதிநிதிகள் சங்கம் ஆகியவை சார்பில் மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு அண்ணாமலை தியேட்டர் அருகில் அரசு ராஜாஜி மருத்துவ மனையுடன் இணைந்து  இரத்த தான முகாம் வெள்ளியன்று நடைபெற்றது .இதில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சங்குமணி, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாவட்டத் தலைவர் பி. கோபி நாத், செயலாளர் டி. செல்வராஜ்,  பொருளாளர் ஜெ. பார்த்தசாரதி, நிர்வாகிகள் பாவெல் சிந்தன், சரண், கார்த்தி, நவீன், மத்திய  பகுதிக்குழு செயலாளர்  விக்கி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயமூர்த்தி, செயலாளர் க. நீதிராஜா, இணைச் செயலாளர் மகேந்திரன்,  மருந்து விற்பனை பிரதிநிதிகள் மாநில துணைத் தலைவர் எஸ். கோபிநாத், மதுரை மேற்கு செய லாளர் ஜி. விவேகானந்தன், பொருளாளர் எஸ்.பி. சிவக்குமார், மதுரை கிழக்கு தலைவர் ஜெ. கலைச்செல்வன் மற்றும் அஜித் ரசிகர் மன்றம்  உள்ளிட்ட பலர் ரத்ததானம் செய்தனர்.

இந்திய மாணவர் சங்கம் - ஸ்பார்டண்ஸ் அஜீத் பேன்ஸ் கிளப் இணைந்து  அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் க. பாலமுருகன், செயலாளர் வேல்தேவா, துணைத்  தலைவர் அசார், முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் ரத்ததானம் செய்தனர்.

கோவை

கோவையில் அனைத்திந்திய  ஜனநாய மாதர் சங்கத்தினர்  கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ஆவாரம்பாளையம் பகுதியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முன்னதாக இம்முகாமை  மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள்  ஒருங்கினைத்தினர்.

காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஆவாரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என மொத்தம்100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டன.