tamilnadu

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் தமிழக அரசு ரூ. 4,200 கோடி இமாலய ஊழல்- எஸ்.சங்கர்

இந்தியாவில் கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்க வும், குறிப்பாக வறுமையிலிருந்து மக்களை மீட்கவும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே உள்ள இடை வெளியை குறைக்கவும் கொண்டு வரப்பட்ட  சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் - 2005 ஆகும். தற்போது 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 614 மாவட்டங்களில் 6096 வட்டங்கள்  மற்றும் 2.65 லட்சம் கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் விரிவடைந்து நாடு முழுவதும் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்தில் பணி யாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை பிரச்ச னைகளை தீர்த்து வைக்க உதவிடுகிறது. சட்டத்தில் சொல்லப்பட்ட வேலை தளத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீரோ, குழந்தைகளுக்கு நிழலோ, ஓய்வெடுக்க இடமோ, முதலுதவி பெட்டியோ எந்த இடங்களிலும் முறையாக இருப்பதில்லை. வேலை செய்யும் போது ஏற்படும் சிறுகா யங்களுக்கு மருந்துகளையும் ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவி பெட்டியில் வைத்திருக்க வேண்டும் என சட்டத்தில் தெளிவாக வற்புறுத்தப்பட்டுள்ளது.  மேலும் மத்திய அரசானது மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து பொதுப் பணிக்கான இயற்கை வள மேம்பாடு, நீர் பாதுகாப்பு பணிகள், நீர் மேலாண்மை, கட்ட மைப்பு, நுண்ணிய சிறு பாசன கால்வாய் கள், வடிகால்களை புதுப்பிப்பது மற்றும் ஊரக சுகாதாரம், மேம்பாடு பணிகளில் கிணறு தோண்டுதல் மற்றம் பண்ணை குட்டை வெட்டுதல, தோட்டக்கலை, மண்புழு உற்பத்தி, செடிகள் வளர்த்தல், பய னற்ற நிலங்களை மேம்படுத்துதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருதல், ஆடு மாடு மற்றம் கோழி கொட்டகைகள் போடுதல் என மேற்கண்ட பணிகளைச் செய்யும்போது பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களை ஈடுபடுத்த முடியும் என்றும் சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் விதியை மீறி தற்போது கட்டிட பணிகளுக்கு இந்த திட்டத்தில் பெரும் பகுதி பணிகள் ஒதுக்கப்பட்டு, சிமெண்ட் எந்திரங்கள் மூலம் வேலைகள் நடைபெறு வது என்பது பரவலாக உள்ளது. இத்திட்டத்தில் சிமெண்ட் வேலைகளும் முழுக்க முழுக்க எந்திரங்களை பயன் படுத்துவது என்பதும் இந்த திட்டத்தை சிதைக்காமல் வேறு எதுவாக இருக்க முடியும்? 100 நாள் வேலை செயல்பாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பினும் கிராமப்புறங்களில் அதன் பயன்பாடு முக்கியமானதாகும். இது ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்விற்கு உதவுகிறது.  இத்திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 2017-18-ல் 54 சதவீதம் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இது மக்கள் தொகையில் அவர்களின் விகி தத்தை விட அதிகம். 2011 மக்கள் தொகை யில் தலித்துக்கள் 17.82 சதவீதம், 100 நாள் வேலையில் அவர்களின் பங்கேற்பு 2009-10-ல் 28.60 சதவீதம் என உச்சத்தை எட்டியது.  இதே காலத்தில் பழங்குடி மக்களின் பங்கேற்பு 18.25 சதவீதம். மக்கள் தொகை யில் அவர்களின் சதவீதத்தை விட அதிகம். ஆனால் மத்திய அரசு இச்சட்ட செயல்பாட்டை வலுப்படுத்திட எவ்வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கா ததும் பல மாநிலங்களில் அலட்சியப் படுத்துவதும் மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.  2017-18-ல் கிராமப்புற குடும்பங்களுக்கு சராசரியாக ஆண்டிற்கு அளிக்கப்பட்ட வேலை நாட்கள் 45. 2018-19-ல் 41 நாட்கள், 2015-16ல் 49 நாட்கள் அளிக்கப் பட்டது. இந்த ஆண்டு 2019-20-ல் நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடி, இது கடந்த ஆண்டை விட ரூ.1084 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் ரூ.4200 கோடிக்கு மேல் இமாலய ஊழல் நடந்திருப்பதாக சமூக தணிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காடுவளர்ப்பு மற்றும் மரங்கள்  வளர்ப்பில்  10 மரங்களை நட்டுவிட்டு 1000 மரங்கள் நட்டதாகவும், அதே மரங்கள் வறட்சியாலும் கால்நடைகளாலும் அழிந்து விட்டதாகவும், சிறிய பண்ணைக் குட்டைகள் வெட்டிவிட்டு பெரிய பண்ணைக் குட்டைகள் வெட்டியதாகவும், இப்படி பல்வேறு மோ சடிகள் செய்து இத்திட்டத்தின் நிதிகள் சூறையாடப்பட்டுள்ளன என்று சமூக தணிக்கை பல இடங்களில் தெரிவிக்கிறது. பல ஊராட்சிகளில் இயந்திரங்கள் பயன் படுத்தி வேலை செய்துவிட்டு மனித சக்தியை பயன்படுத்தி வேலை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து இந்த நிதியை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் எந்த ஊராட்சியிலும் 100 நாட்கள் வேலை யும் சட்டப்பூர்வ கூலி ரூ.229-ம் கிடைக்க வில்லை என்பது பெரும் வேதனையாக உள்ளது. இத்திட்டத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயரும் போது அதற்குரிய நிதியை கூடுத லாக உயர்த்தி வழங்குவதற்கு மாறாக குறைத்து ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  மேலும் இன்றைய விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் இக்காலத்தில் அதிகரித்திருக்கும் சூழலில் 200 நாள் வேலையும் ரூ.600 கூலியும் கொடுக்க வேண்டும் எனவும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழலற்று அமல்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் வஞ்சிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களும் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் முழக்க போராட்டத்தை மார்ச் 10-ஆம் தேதி நடத்த உள்ளது. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற கீழ்க்காணும் கோரிக்கைகளை விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது. 

♦ விலைவாசி உயர்வு வேலையில்லாத் திண்டாட்டத்தை கணக்கில் கொண்டு ஆண்டுக்கு 250 நாட்கள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்க வேண்டும்.
♦ மத்திய அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பலப்படுத்த வேண்டும்.
♦ தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் சமூக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ள ஊழல்கள் குறித்த உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
♦ 15 நாட்களில் கூலி வழங்க வேண்டும். 
♦ ஒரு ஆண்டுக்கான வேலை தொகுப்பை ஊராட்சி பலகையில் ஒட்டவேண்டும்.
♦ குறிப்பிட்ட நாளில் வந்தால்தான் வேலை தருவோம் என்பதை மாற்றி எந்த நாட்களில் வேலைக்கு வந்தாலும் வேலை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

;