tamilnadu

சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே நடத்துக!

சென்னை,ஜூன் 9- தமிழக சட்டப்பேரவைக் கூட் டத்தை உடனே நடத்திட வேண்டும் என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டப்படுவதை தள்ளிப்போடு வது தேவையில்லா குழப்பங்கள்,  நெருக்கடிகளுக்கு வழி வகுக்கும். நிச்சயமற்ற அரசியல் சூழலால் சட்டமன்றத்தை கூட்ட முத லமைச்சர் அச்சப்பட்டால் ஆளு நர் தலையிட வேண்டும்.  பேரவை கூட்டம் நடைபெறா மல் இருப்பதால், அரசுத்துறை பணிகளில் தேக்கம் ஏற்பட்டி ருப்பது வேதனையளிக்கிறது. தமி ழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.