tamilnadu

img

மக்களைக் குழப்பும் மோடி அரசு; தெளிவாக்கும் பொறுப்பு நமக்கு!

சிஐடியு மாநாட்டு நிறைவில் டாக்டர் கே.ஹேமலதா அறைகூவல்

சென்னை, ஜன.27- குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசு குழப்ப முயல்கிறது, அது பற்றித் தெளிவாக எடுத்துக்கூறி சக தொழிலாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்று இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முக்கியக் கடமையாக முன் வந்துள்ளது என்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா கூறினார். சென்னையில் ஐந்து நாட்களாக நடைபெற்ற சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில், அதன் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஹேமலதா திங்களன்று (ஜன.27) நிகழ்த்திய நிறைவுரையில், தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய தலையாய கடமையாக சிஏஏ-என்பிஆர்- என்ஆர்சி எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் முன்வந்துள்ள தைக் குறிப்பிட்டார். நாடு முழுதும் பல்வேறு அமைப்பு கள் “மக்கள்தொகை கணக்கெடுப்பை ஏற்போம், மக்கள் தொகை பதிவேட்டுக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்போம், என்ஆர்சி பதிவுக்கான ஆவணங்களைக் காட்ட மாட்டோம்” என்ற முழக்கத்துடன் இதே இயக்கத்தை மேற் கொண்டுள்ளன. சிஐடியு தோழர்களும் வீடுவீடாகச் சென்றும், தொழிலாளி தொழிலாளியாகச் சந்தித்தும் சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக அரசாங்கம் பல்வேறு தாக்குதல்களைத் தொடுக்கிறது. அதே வேளையில், ஒன்றுபடும் தொழிலாளர்களிடையே பகைமை உணர்வுகளைத் தூண்டிவிட்டுப் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளில் மத ஆதிக்கவாத சக்திகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த இரட்டைத் தாக்குதல்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டாக வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்லா மல், பொதுமக்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடுகிற பாரம்பரியம் சிஐடியுவுக்கு உண்டு என்று கூறிய அவர், இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற ஜனநாய கத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கிற போராட்டத்தோடும் அந்தப் பாரம்பரியம் இணைகிறது என்றார். சமுதாயத்தின்  அங்கம் என்பதோடு, மக்களுக்கா கவும் செயல்படுவது வர்க்கக் கடமையோடு இணைந்தது மாகும் என்றும் குறிப்பிட்டார். கிராமங்கள், ஊர்கள் என வேர் மட்டத்தில் செயல் படும் தொழிலாளர்கள் முதல் தலைமைப் பொறுப்பில் உள்ள வர்கள் வரையில் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டாக வேண்டும் என்றார் அவர். சிஐடியு தனது பொன்விழாவைக் காண்கிற கால கட்டத்தில், இந்தியாவில் மத்தியத் தொழிற்சங்க இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாக்களைத் தொழிலாளர்களிடையே அரசியல் மற்றும் சித்தாந்தக் கல்வியைப் பரவலாக்குவதற் கான இயக்கமாகவும் கொண்டாட வேண்டுகோள் விடுத்தார் ஹேமலதா.

;