tamilnadu

img

மார்க்சிஸ்ட் லைப்ரரி செயலி அறிமுகம்

சென்னை,ஜன .21- 43வது சென்னை நந்தனம் புத்தகக்காட்சியில் பாரதி புத்தகாலயம் உருவாக்கிய  மார்க்சிஸ்ட் லைப்ரரி (marxist library) என்ற செயலியை கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட அதனை   லெனின்துரை ராஜ் (தீக்கதிர் டிஜிட்டல் பதிப்பு)  மாணவர் சங்க நிர்வாகி சந்துரு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.   மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன்,  மார்க்சிய ஆய்வாளர் மு.சிவ லிங்கம், பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த செய லியை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நூல்களை டிஜிட்டல் வடிவில் படிக்கலாம். துவக்க நிலையில் இருப்பதால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டும் அதில் இடம்பெற்றுள்ளது. விரைவில் இதர நூல்கள் சேர்க்கப்படும்.

;