tamilnadu

img

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர்

ஈரோடு, ஆக. 10- அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்கள்  சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,“கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் 21 ஆயிரம் மாணவர்களுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்” என்றார். ஈரோடு மாவட்டம் கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊராகும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாட்டில் கோபியில் இச்செயலி துவங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.