சென்னை, ஜூலை 1- தென்மேற்கு பருவமழை கார ணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவா லாவில் 1 செ. மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் பதி வாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது.