சென்னை, செப்.15- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியா ளர்களை சந்தித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். 24 மணி நேரமும் செயல்படும் மாநில கட்டுப்பாட்டு அறையை 1070 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் பேரிடர் தொடர்பான தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும், தொடர்புடைய அலுவலகங்களுக்கும் விரைவாக கொண்டு சேர்க்கப்படும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.மாவட்ட அளவிலான 24 மணி நேர அவசரகாலக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.