வீட்டின் உரிமையாளர் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்யவலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தலித் அமைப்பினர் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் தடியடி நடத்தி, கைது செய்தனர்.இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணி சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்துக்கு காரணமானவர் களின் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும்நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
வழக்கு பதிவு
இதற்கிடையே, சுவர் விழுந்து விபத்துக்கு காரணமான சொகுசு வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக இருத்தல் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்
இதனிடையே விபத்து நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழுஉறுப்பினர் சி.பத்மநாபன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், யு.கே.சிவஞானம் மற்றும் வி.பெருமாள், சிராஜூதின், மகபுனிசா, பாட்சா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்பின் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், “விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரின் ஆபத்தை உணர்ந்து இதனை இடிக்க வேண்டும் என பல முறைசிஐடியு பொதுதொழிலாளர் சங்கம் உள்ளிட்டஅமைப்புகள் அரசு நிர்வாகத்திடம் மனுஅளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டு 17 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விரிவான நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இடிந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை அரசேஉடனடியாக கட்டித்தர வேண்டும். உயிரை யும், உடைமையும் இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் நிவாரணம் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.