ரவிசங்கர் பிரசாத் சவால்
அகமதாபாத், மார்ச் 2- முடிந்தால் பாஜகவைத் தோற் கடித்துப் பார்க்குமாறு, இடது சாரிகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சவால் விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கேவடி யாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன் றில் ரவி சங்கர் பிரசாத் பேசியுள்ளார். அப்போது, “என்னுடைய இடதுசாரிக் கட்சி நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் எங்க ளைத் தோற்கடித்து மத்தியில் உங்களுடைய ஆட்சியைக் கொண்டு வாருங்கள். மதச்சார் பின்மை, ஒற்றுமை மற்றும் மனித உரிமைகள் குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். “ராமர் அயோத்தியில் பிறந் தார் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் நம்பு கிறது என்றபோதிலும் ராமர் பிறந்ததற்கான ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ஆனால், அவர் கள்தான் என்பிஆர் கணக்கெ டுப்பு நடந்தால் நாங்கள் எந்த வித ஆவணங்களையும் காட்ட மாட்டோம் என சொல்கிறார்கள். இது போலித்தன்மை” என்றும் ரவிசங்கர் பிரசாத் கொதித்துள் ளார்.