tamilnadu

img

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி!

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த பாஜக, உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத்தேர்தலில், படுதோல்வி அடைந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில், ஆளும் காங்கிரஸ் கட்சியே பெரும்பாலான இடங்களைப் பிடித்துள்ளது.

ராஜஸ்தானில், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக-வுக்கு 29 இடங்களே கிடைத்துள்ளன. 6 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர காங்கிரஸ் 8, பாஜக 2, சுயேட்சைகள் 5 பேர் என 15 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இதுபோல் 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக-வுக்கு ஒற்றை இடம் மட்டுமே கிடைத்துள்ளது. எஞ்சிய ஓரிடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.இந்நிலையில், “ராஜஸ்தான் மாநிலஉள்ளாட்சித் தேர்தல் வெற்றி, காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது” என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் கூறியுள்ளார்.“மக்களின் எதிர்பார்ப்புகளை எங் கள் அரசு நிறைவேற்றி வருகிறது. அரசின் கொள்கைகளால் மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;