india

img

மேற்கு வங்க இடைத்தேர்தல் : திரிணாமூல், பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

கொல்கத்தா 
மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சத்தீஸ்கரின் கைராகர், மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, பீகாரின் போச்சான் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கத்தில் இனி இடதுசாரிகளுக்கு வேலை இல்லை என்று மாநிலத்தில் ஆளும் குண்டர் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஒன்றியத்தில் ஆளும் பாஜக ஆகிய கட்சிகள் தனக்கு சாதகமான ஊடகங்கள் மூலம் கருத்து கூறி வந்த நிலையில், பாலிகங்கே தொகுதி இடைத்தேர்தல் மூலம் தாங்கள் யார் என்பதை இடதுசாரிகள் நிரூபித்துள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாலிகங்கேவில் 8,474 வாக்குகள் (5.61%) வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தன. ஆளும் திரிணாமூல் கட்சி 70.60% (1.06 லட்சம் வாக்குகள்)  வாக்குகளுடன் வெற்றி பெற்றது. பாஜக 20.68% (31,226 வாக்குகள்)  வாக்குகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

இதே பாலிகங்கே தொகுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பாலிகங்கே தொகுதியை ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பபுல் சுப்ரியோ 51,199 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் கடந்த தேர்தலில் 3-வது இடத்தை பிடித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை 24.99% வாக்குகள் கூடுதலாக பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர் சைரா ஹலீம் 30,971 வாக்குகள் பெற்று திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். கடந்த முறை 2-வது இடத்தை பிடித்திருந்த பாஜக 13,220 வாக்குகள் பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.