tamilnadu

img

சினிமாவில் நடிப்பது எவ்வாறு இந்து கலாச்சாரத்தை பாதிக்கும்?

மும்பை:
இந்து மதத்தைச் சேர்ந்த நடிகைகள், திரையுலகிலிருந்து விலக வேண்டும் என்று இந்து மகாசபை தலைவரும்,சாமியாருமான சக்ரபாணி கூறியிருந்த நிலையில், அவருக்கு பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமீர்கான் இயக்கத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘டங்கல்’.பெண் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிறுமியாக அறிமுகம் ஆனவர், ஜைரா வாசிம். காஷ்மீர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, முதல்படமே வெற்றிப் படமாக அமைந்ததுடன், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து ஜைரா வாசிம் நடித்த ‘சீக்ரட்சூப்பர் ஸ்டார்’ என்ற படமும் சூப்பர் ஹிட்ஆனது. தற்போது அவருடைய மூன்றாவது படமான ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ விரைவில் வெளியாக உள்ளது. இவ்வளவுக் கும் இப்போதுதான் ஜைராவுக்கு 18 வயது ஆகிறது.

இந்நிலையில், ஜைரா வாசிம் “தாம்இனிமேல் திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை” என்றும், மத நம்பிக்கைகளுக்கு தனது நடிப்புத் தொழில் இடையூறாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது முடிவுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.ஆனால், ஆச்சரியப்படும் வகையில், இந்து மகாசபை தலைவர்- சாமியார் சக்ரபாணியும், ஜைரா வாசிம்முடிவை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த சக்ரபாணி, “ஜைராவின் முடிவு மிகவும் மதிப்பிற்கு உரியதாகும்” என்று கூறியிருப்பதுடன், “ஜைராவைப் பார்த்து, இந்து மதத்தைச் சேர்ந்த நடிகைகளும், திரைப்படங்களில் நடிப்பதைக் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்துப்பெண்கள் சினிமாவில் நடிப்பது, இந்துகலாச்சாரத்திற்கு எதிரானது என்பதாக அவரின் கருத்து இருந்தது.

இந்நிலையில்தான், சாமியார் சக்ரபாணிக்கு, பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பதிலடி கொடுத்துள் ளார். “திரைப்படங்களில் நடிப்பது, எவ்வாறு இந்து மதத்தை அல்லது இந்து கலாச்சாரத்தைப் பாதிக்கிறது?” என்று சாமியார் சக்ரபாணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனக்கு விளக்கங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

;