tamilnadu

img

கட்சி உறுப்பினர் அட்டை வழங்கல்

மன்னார்குடி, மே 19-கோட்டூரில் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு தலைமையில் பேரவை நடைபெற்றது. மூத்த கட்சித்தோழர் எஸ்.தங்கராசுமுன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா உரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கிகட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் என்ற தலைப்பில்சிறப்புரையாற்றினார். பேரவையில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் முத்துப்பேட்டை ஒன்றியத்தின் கட்சி உறுப்பினர்அட்டை வழங்கும் பேரவை ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கட்சி உறுப்பினர் அட்டைகளைமாவட்டக்குழு செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி ஒன்றியக்குழுஉறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கி முடிவில் ஸ்தாபனமும் கட்சி உறுப்பினர்கள் கடமைகளும் என்ற என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேரவையில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் என்.ராஜேந்திரன், பி.வி.கனகசுந்தரம், ஆர்.வீரமணி, எல்.டி.வீரசேகரன், என்.தனவேந்தன், வி.துரைராஜ், சி.செல்லதுரை, ஐ.வாசுகி, கே.எம்.எஸ்.தேவகி உள்ளிட்டு கிளை செயலாளர்கள் உறுப்பினர்கள் 145 பேர் பங்கேற்றனர்.