இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
திருவாரூர், ஜூலை 26- திருவாரூரில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் “சம வேலைக்கு சம ஊதியம்’’ வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசு தேர்தல் வாக்குறுதி எண் 311 இல் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் ஏகராஜா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.