சாதி ஆணவக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து, சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வந்தவாசி வட்டம், தெள்ளாறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்துவை சாதி ஆணவ படுகொலை செய்த கயவர்களை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
                                    