கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூலை 27- கனிமவளக் கொள்ளைகளை தடுத்து நிறுத்தும் வகையில், கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்ன வாசல் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய 17 ஆவது மாநாடு, ஞாயிற்றுக் கிழமை பரம்பூரில் நடைபெற்றது. ஏ. பிர காஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தொடங்கி வைத்து உரையாற்றினார். சங்கத்தின் முன்னாள் மாவட்டப் பொருளா ளர் ஏ.தேவராஜன் வாழ்த்திப் பேசினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டச் செயலாளர் ரா. மகாதீர் நிறைவுரையாற்றினார். ஒன்றியத் தலைவ ராக எம்.மணிகண்டன், செயலாளராக ஏ.பிர காஷ், பொருளாளராக அழகுராஜா உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக தரணிபதி வரவேற்க, எம்.மணிகண்டன் நன்றி கூறினார். கனிமவளக் கொள்ளைகளை தடுத்து நிறுத்தும் வகையில், கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். பரம்பூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பரம்பூர் பள்ளத்து குளத்தில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். மேலூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்க ளுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 27- திருச்சியில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களை ஒடுக்கி, தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களை யும், நிதிகளையும் வழங்க மறுக்கும் பிரதமர் மோடியை கண்டித்து, திருச்சியில் ஞாயிறன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தியும், சிலர் கருப்புச் சட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட பொருளாளர் முரளி தலை மையில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி யினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறை யினர் கைது செய்தனர்.