வாலிபர் சங்க திருச்சி மாவட்ட மாநாட்டு இலச்சினை வெளியீடு
திருச்சிராப்பள்ளி, ஆக.27 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 18 ஆவது மாநாடு செப்டம்பர் 14, 15 ஆம் தேதிகளில் பொதுக் கூட்டத்தோடு பாலக்கரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டக் குழு சார்பில் மாநாட்டு இலச்சினை வெளியிடப்பட்டது. இதனை மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும், திருச்சி மாநகராட்சி 35 ஆவது மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் பெற்றுக் கொண் டார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் வரவேற்புக் குழுச் செயலாளர் ஷாஜகான், வரவேற்புக் குழு பொருளாளர் பாரதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.