சென்னை,பிப்.23- அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி 1,060 விரி வுரையாளர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலை யில் அதில் முறைகேடுகள் நடந்த தாகக் கூறி தேர்வு ஒத்தி வைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் விண்ணப்பதாரர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தொலை தூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற பிரச்சனை எழுந்த வுடன் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப் பட்டது. பிறகு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டது.
ஆனால் விண்ணப்பதாரர்களின் வசிப் பிடத்தில் இருந்து தொலைதூரங் களிலே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தொலை தூரங்களில் தேர்வு எழுதும் மையங் கள் போடப்பட்டு வருகிறது. இதனால் பலர் தேர்வுக்குச் செல்ல முடியாத நிலையும் தேர்வுக்குச் சென்ற வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியாத நிலையும் ஏற் பட்டுள்ளது. எனவே, வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே தேர்வு மையங்கள் அமைத்துக் கொடுத்திட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே 2 முறை தள்ளி வைக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தேர்வில் மீண்டும் குளறுபடி நடந்திருப்ப தாக தேர்வர்கள் தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர் என அறிகிறோம். பல்வேறு குளறுபடிகளோடு தேர்வு நடந்ததாலும் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத தால் மாணவர்கள் மேலும் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு களில் தொடர்ந்து குளறுபடி ஏற்படு வதை தடுத்து நிறுத்திட உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் உடனடியாக கடந்த 2021-டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகளை வெளி யிடவும் தமிழக அரசாங்கம் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.