tamilnadu

img

வாலிபர் சங்க கோவை மாநாடு பேரணி

வாலிபர் சங்க கோவை மாநாடு பேரணி

கோவை, ஆக.24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட 20 ஆவது மாநாடு, பேரணி யுடன் ஞாயிறன்று துவங்கியது. வட கோவை சிந்தாமணி அருகே கலை நிகழ்ச்சி களுடன் துவங்கிய பேரணி, தெப்பக்குளம் மைதானத்தில் நிறைவடைந்தது. இதைய டுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விவே கானந்தன் தலைமை வகித்தார். பொருளா ளர் எம்.தினேஷ்ராஜா வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தலைவர்  எஸ்.கார்த்திக், மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன், மாவட்டச் செயலாளர்  ஆர்.அர்ஜூன், துணைச்செயலாளர் ந.ராஜா, துணைத்தலைவர்கள் எம்.மணிபாரதி, எஸ். நிஷார் அகமத் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக, பேரணியில் சென்ற வர்களை, சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ராமமூர்த்தி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.