“உங்களுன் ஸ்டாலின்’’ திட்ட முகாம்கள் தொடக்கம்'
அரியலூர், ஜூலை 15- அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்முகாம், முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரியலூர் ஆட்சியர் அலுவலககக் கூட்டரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 முதல் அக்டோபர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறவுள்ளது. நகராட்சி பகுதிகளில் 5 வார்டுகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஊரக பகுதிகளில் 10,000 பொதுமக்கள் வசிக்கும் பகுதி அல்லது 4 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 1 முகாம் என்ற அடிப்படையிலும் 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாமானது அரியலூர் மாவட்டத்தில், ஜூலை 15 இல் தொடங்கி, ஆக 14 வரை 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஆக. 15 ஆம் தேதி முதல், செப். 14 ஆம் தேதி வரை 36 முகாம்களும், செப். 15 இல் தொடங்கி அக் 14. ஆம் தேதி வரை 23 முகாம்களும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், மாவட்ட வருவாய் அலுவ லர் க.ரா.மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூரில், உங்களுடன் ஸ்டா லின் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் உடனடித்தீர்வாக வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ்களுக்கான நகல் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை, மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பி னரும் வழங்கினர். கரூர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கப்பாளையத்தில் நடைபெற்ற முகாமில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம், மாவட்ட வருவாய் அலு வலர் ம.கண்ணன், மேயர் வெ.கவிதா, ஆணையர் கே.எம். சுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.