tamilnadu

உலகை சுற்றும் இளம் விமானி ஜாரா ரூதர்போர்டு

கோவை, டிச. 31 - பெல்ஜியத்தை சேர்ந்த இளம் விமானி ஜாரா ரூதர்போர்டு (19). இவர்  உலகின் அதிவேக இலகு ரக விமானத்தில் 51 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெல்ஜியத்தி லிருந்து கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி புறப்பட்ட அவர், 5 கண்டங்கள், 52 நாடு களை வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில்  விமானத்தில் பயணித்து கடக்க திட்ட மிட்டுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக கோவை வந்தடைந்த அவர், செய்தி யாளர்களிடம் கூறுகையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணி தம், வான்வெளி தொடர்பான வேலை வாய்ப்பில் உள்ள பாலின இடை வெளியை எடுத்துக்காட்டும் வகையில் இந்த பயணம் அமையும் என நம்புகி றேன் என்றார்.