tamilnadu

img

மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப்.5 – தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 1,794 கள  உதவியாளர் பணியிடங்களுக்கு அக்டோபர் 2 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு  இரண்டின் கீழ் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. www.tnpscexams.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால் அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பத் தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். இப்பணிக்கு மின் பணியாளர், கம்பியாளர், சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்னியல் தொழில் பிரிவில்  படித்து தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தால் வழங்கப்படும் தொழிற் சான்றி தழ் அல்லது தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்ப டும். தமிழ்த் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி  வரையிலும், தொழிற்பிரிவு மின் பணியாளர் மற்றும் கம்பியாளர் பிரிவு தேர்வு மதியம் 2.30 மணி  முதல் 5.30 மணி வரையில் நடைபெறும்.  தமிழ்த் தகுதித் தேர்வில் 60 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிற பகுதிகள் திருத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கு அடுத்த கட்டமாக கம்பம் ஏறுதல்,  குறுக்கு கை பொருத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும்.