tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுச்சேரி அமைச்சர் மீது  பெண் எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியின் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரு மான சந்திரபிரியங்கா (35), தனக்கு ஒரு அமைச்சர் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக வீடியோ வெளி யிட்டு குற்றம் சாட்டியுள்ளார். 12 நிமிடம் 23 வினாடி நீளமுள்ள அந்த வீடியோவில் சந்திர பிரியங்கா கூறுகையில், “காரைக்காலில் ஒரு பதாகை  பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்ததாகவும், அந்தப் பதாகையில் தனது படமும் இருந்த தால் தான் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரி வித்தார். நீதிமன்றத்துக்கு செலவுகூட செய்ய முடியாத ஒருவர் இதைச் செய்திருந்தாலும், இதன் பின்னணியில் இருப்பது ஒரு அமைச்சர் என்பது தனக்கு நன்றாகத் தெரி வதாக” கூறினார். “நான் அமைச்சர் பதவியில் இருந்தபோதும் பல  தொல்லைகளை அளித்தார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும்போதும் மேலும் தொல்லைகளை அளிக்கிறார். நான் செல்லும் பாதைகளெல்லாம் அவர் உளவாளி வைத்தி ருக்கிறார். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்ப தும் எனக்குத் தெரியும்” என்று சந்திரபிரியங்கா குற்றம் சாட்டி னார். இந்த விவகாரத்தை ஒரு உயர் அதிகாரியிடம் புகார்  தெரிவிக்கச் சென்றபோது அவருக்கும் அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சராகவும் எம்.எல்.ஏ. வாகவும் இருக்கும் தனக்கே இந்த நிலைமை என்றால், சாதா ரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி  எழுப்பினார். “ஒரு பெண்தானே என்று ஏளனமாக பார்க்கா தீர்கள். எல்லா தொகுதியிலும் பெண்கள் வாக்குதான் அதிகம்.  நீங்களும் வாழுங்க, என்னையும் வாழ விடுங்கள்” என்று முடித்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியா னதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

தடை விதிக்க கோரிக்கை  

சென்னை: தமிழ்நாட்டில் ‘டி மார்ட்’ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை விற்பனையகங்களில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர் களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் ‘டி மார்ட்’ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை  விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்  தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்’

சென்னை: “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடு வதில்லை. அதேபோல தான் தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் எடப் பாடி பழனிசாமி கை யெழுத்திட்டு, முதுகில் குத்திவிட்டார். அதனால் தான் நாம் ஏமாந்து விட்டோம்” என கட்சி நிர்வா கிகளுடன் நடந்த கூட்டத் தில் பிரேமலதா விஜய காந்த் கடும் விமர்ச னத்தை முன்வைத்தார்.

முதலமைச்சர் அறிவுறுத்தல்  

சென்னை: சென்னை மாநகரில் சனிக்கிழமை இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. ஜெர்மனி சென்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து தொலைபேசி மூலம் மாநகராட்சி அதி காரிகளை தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு கள் குறித்து கேட்டறிந் தார். மேலும், பொது மக்க ளுக்கு எவ்வித பாதிப்பு களும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறி வுறுத்தினார்.