இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் நீதிபதி மீது செருப்பு வீசி சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் சாதி வெறியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை முன்னணி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் திருவொற்றியூர் டோல்கேட் அருகே வியாழன்று (அக். 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டத் தலைவர் வி.ஜானகிராமன், செயலாளர் எம்.ராஜ்குமார், பொருளாளர் வீ.ஆனந்தன், மாவட்ட துணைத்தலைவர் செம்மல், மாவட்டக்குழு உறுப்பினர் கோபி, சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் காவியா ஆகியோர் பேசினர்.
