tamilnadu

img

கல்வியை காவிமயமாக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக!

கல்வியை காவிமயமாக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக

இந்திய மாணவர் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம்

நாகப்பட்டினம், செப்.3 -  இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)  சமீபத்தில் வணிகவியல், மானுடவியல், பொருளாதாரவியல், கணிதம், உடற்கல்வி யியல், புவியியல், வேதியியல், ஹோம்  சயின்ஸ் மற்றும் அரசியல் அறிவியல் போன்ற 9 பாடங்களுக்கான பாடத்திட்டங் களை மாற்றி புதிதாக வெளியிட்டு இருக்கிறது.  பாடத் திட்டங்களில் புதிதாக ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்வது என்பது  கல்விச்சூழலில் மாறியிருக்கும் தன்மைகள், தொழில்நுட்பங்களின் பயன்பாட்டு அறிவு குறித்து மாற்றியமைக்கப்படும்.  ஆனால் யுஜிசி தற்போது இந்த 9 பாடங்க ளில் செய்திருக்கும் திருத்தஙக்ள் அனைத்தும்  2000 வருடங்களுக்கு முந்தைய பாகு பாட்டை வலியுறுத்தும், குருகுல கல்வியை,  மன்னராட்சி போர் தந்திரங்கள், பொரு ளாதார கொள்கைகள் என ஆர்.எஸ்.எஸ். –  பாஜகவின் கொள்கைகளாக இந்துத்துவ சித்தாந்தங்களை புகுத்தியிருக்கின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான “இந்துத்துவா” கருத்தியலை, அரசியல் அறிவியல் துறையில் ஒரு பாடப் பிரிவாக இணைத்திருக்கிறார்கள்.  அரசியல் அறிவியல் துறையை, பாஜக வின் அரசியல் கொள்கையாக மாற்ற நினைப்பதே இவர்களின் நோக்கமாக இருக் கிறது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றிய பாஜக அரசின் நட வடிக்கையையும், அதற்கு துணை போகும்  யுஜிசியின் செயல்பாடுகளையும் வன்மை யாக கண்டிப்பதோடு, இதனை திரும்பப் பெற வும் வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை மாநிலம் முழு வதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அரசு கலை அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் எம்.முகேஷ் ராஜன் தலைமை  வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.புவனேஸ்வரி  locf நகலை எரித்து போராட்டத்தை விளக்கி  பேசினார். மாவட்டத் துணைச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் சந்துரு, மாவட்டக் குழு உறுப்பினர் சந் தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாணவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் குழு சார்பில், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் நகல் எரிப்பு போராட்டம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வசந்த்  தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஹரிஷ் கண்டன உரை யாற்றினார். மன்னர் சரபோஜி கல்லூரி கிளை நிர்வாகிகள் விக்கி, நித்யசூர்யா, மகா பாரதி, பகவதி உட்பட 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு  அரசு கலைக் கல்லூரியில் மாவட்டச் செய லாளர் அவினாஷ்   தலைமையில் போராட் டம் நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டம்,  பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் ஒன்றியத் தலைவர் பிரவீன் தலைமையி லும், பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற்ற போராட் டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் அபி னாஷ் தலைமையிலும்  நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் அபி னேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து  கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லூ ரியில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் க.சரவணன் தலைமை  வகித்தார். கிளைச் செயலாளர் அ.பிரசன்னா  முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் பா.விக்னேஷ் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.சூர்யா, தியாகு, மாவட்ட துணைத் தலைவர் சி.அட்சயா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப. சரண்யா, ரா.ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.