tamilnadu

img

சம்பள விதி திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக! நாடு முழுவதும் ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி

சம்பள விதி திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக! நாடு முழுவதும் ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி

சென்னை, ஜூலை 25- ஒன்றிய அரசின் சம்பள விதிகள் திருத்தச்  சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வெள்ளி யன்று (ஜூலை 25) நாடு முழுவதும் ஓய்வூதி யர்கள் மனிதச் சங்கிலி நடத்தினர். அதன் ஒரு  பகுதியாக சென்னையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும் போது, அதன் பலன்  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கிடைத்து வந்தது. இதனை மாற்றும் வகையில் ஒன்றிய  அரசு ஊழியர் ஓய்வூதிய விதிகள்-1972 இல் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து 1982 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஓய்வூதியர்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில், 2025 மார்ச் மாதம்  ஒன்றிய அரசு நிதி மசோதா வாயிலாக, ஓய்வூ திய விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை நீர்த்துப்  போகச் செய்யும் வகையில் அந்த திருத்தம் உள்ளது. இதன்படி 8 ஆவது சம்பள ஆணை யத்தின் பரிந்துரை பலன்கள் பழைய ஓய்வூதி யர்களுக்கு கிடைக்காது. பரிந்துரை அமலா கும் காலத்திற்கு பிறகு ஓய்வு பெறுகிற வர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை மாநில அரசுகளும் பின்பற்றும் அபாயம் உள்ளது. இதனை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட  ஓய்வூதியர் அமைப்புகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் இந்த சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். 8  ஆவது ஊதியக்குழு அமைத்து, அதற்கான விதிகளை உருவாக்க வலியுறுத்தி வெள்ளி யன்று (ஜூலை 25) இந்தியா முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அகில இந்திய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னையிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசு ஓய்வூ தியர்கள், பிஎஸ்என்எல், ரயில்வே உள்ளிட்ட  பொதுத் துறை ஓய்வூதியர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகை யில், “ஒன்றிய அரசு ஊழியர் விதி திருத்தம்  1972 ஆம் ஆண்டிலிருந்து அமலாகும் என்று முன்தேதியிட்டு திருத்தம் செய்துள்ளனர். 8  ஆவது ஊதிய ஆணையம் அமைக்க பரிந்துரை அளித்தாலும், சட்டம், நீதிமன்ற தீர்ப்புகள் எதுவாக இருந்தாலும், எந்த தேதியிலிருந்து அமல்படுத்துவது, யாருக்கெல் லாம் வழங்கலாம் என்று முடிவெடுக்கும் அதி காரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்று  திருத்தி உள்ளனர். இதனை ஏற்க முடியாது”  என்றார். “ஒன்றிய அரசு செய்துள்ள சட்ட திருத்தத் தின்படி, ஓய்வூதியர்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் உயரவே உயராது. இந்த திருத்தத்தால் ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமின்றி பொதுத்துறை ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்களையும் பாதிக்கும். எனவேதான், நாடு முழுவதும் 90 லட்சம்  ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி போராட்டத் தில் ஈடுபட்டனர்” என்றார்.