tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

விண்டோஸ் 10 சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

விண்டோஸ் 10 இயங்கு தளத்திற்கான சேவை யை வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் நிறுத்த இருப்ப தாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் EVP & Consumer CMO யூசுப் மெஹ்தி தனது சமீபத்திய வலைப்பதிவில் இது குறித்த விவரங்களையும், விண்டோஸ் 10 பயனர்கள் அடுத்த டுத்து என்ன செய்ய வேண்டும் என்ப தையும் பகிர்ந்துள்ளார். அதன்படி, விண்டோஸ் 10 இயங்குதளத்திற் கான சேவை அக்டோபர் 14-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.  அதன்பிறகு, விண்டோஸ் 10 இயங்குதளத் திற்கான பாதுகாப்பு அப்டேட்கள் (security  updates), தொழில் நுட்ப திருத்தங்கள் (technical fixes) அல்லது புதிய அம்சங்களை எது வும் பயனர்களுக்கு வழங்கப் படாது. இதன் விளைவாக, விண் டோஸ் 10 இயங்குதளம் பயன் படுத்தும் கணினிகள் பாதுகாப்பு அச்சு றுத்தல்கள், மால்வேர் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள் ளது. இதை சமாளிக்கும் வகை யில், 2028 அக்டோபர் வரை Microsoft Defender Antivirus-க்கான பாது காப்பு நுண்ணறிவு (security intel ligence) அப்டேட்கள் வழங்கப் படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  எனினும், இது முழுமையான ஓ.எஸ். பாதுகாப்பு அப்டேட்களுக்கு இணையாக செயல்படாது எனவும் எச்சரிக்கிறது.  மேலும், பயனர்கள் விருப்ப மிருந்தால் விண்டோஸ் 11-க்கு அப்கி ரேட் செய்யலாம் அல்லது ESU (Ex tended Security Updates) திட்டத்தைத் தேர்வு செய்து விண் டோஸ் 10 பாதுகாப்பு அப்டேட்களை தொடர்ந்து பெற்று பயன்படுத்தலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடல், டவுன்லோட் ஹிஸ்ட்ரியை நீக்குவது எப்படி?

கூகுள், அதன் சேவைகள் அனைத்தின் மூலமாகவும் உங்கள் செயல்பாடு களை கண்காணித்து வருகிறது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளே ஸ்டோர் செயலியில், நீங்கள் தேடிய செயலிகள் 
மற்றும் டவுன்லோட் செய்த செயலிகளின் விவரங்கள் சேமிக்கப்பட்டு, சமீபத்திய தேடல்கள் மற்றும் டவுன்லோட் ஹிஸ்ட்ரியில் காண்பிக்கிறது. நீங்கள் இந்த தேடல் மற்றும் டவுன்லோட் ஹிஸ்ட்ரியை நீக்க விரும்பினால் அது எப்படி என்று பார்க்கலாம்:

கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடல் ஹிஸ்ட்ரியை நீக்குவது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடல் ஹிஸ்ட்ரியை நீக்குவது எப்படி? 1) கூகுள் ப்ளே ஸ்டோர் செயலியை திறந்து, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் profile icon-ஐ கிளிக் செய்யவும். 2)அதில் காண்பிக்கும் மெனுவில், Settings-ஐ தேர்வு செய்து ‘Gene ral’ என்பதைத் தேர்ந்தெடுத்து Account and device preferences  என்ற ஆப்ஷனை கிளிக்செய்யவும். 3) அதில் History-க்கு சென்று, Clear device search history என்ற ஆப்ஷனை தேர்வு செய்து தேடல் வரலாறுகளை நீக்கலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் ஹிஸ்ட்ரியை நீக்குவது எப்படி?

1) கூகுள் ப்ளே ஸ்டோர் செயலியை திறந்து, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் profile icon-ஐ கிளிக்  செய்யவும். 2) அதில் காண்பிக்கும் மெனுவில், Manage apps and device-ஐ தேர்வு செய்து ‘Manage’ என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை காண்பிக்கும். 3) அதில் This Device என்பதை கிளிக் செய்து Not installed என்பதை தேர்வு செய்யவும். அதில், நீங்கள் முன்பு பயன்படுத்திய ஆனால் இப்போது நீக்கப்பட்ட அனைத்து செயலிகளின் பட்டியலையும் பார்க்கலாம். 4) அந்த பட்டியலில் இருந்து ஒரே நேரத்தில் தேவையற்ற செயலிகளின் checkbox-ஐ கிளிக் செய்து, மேல்-வலது மூலையில் உள்ள Delete ஐகானை கிளிக் செய்து டவுன்லோட் ஹிஸ்ட்ரியை நீக்கலாம்.