tamilnadu

பாதி வழியில் பழுதடைந்த அரசு பேருந்து டிராக்டரில் கட்டி இழுத்து வரப்பட்ட அவலம் தீருமா?

பாதி வழியில் பழுதடைந்த அரசு பேருந்து டிராக்டரில் கட்டி இழுத்து வரப்பட்ட அவலம் தீருமா?

ஒட்டன்சத்திரம், அக்.2 – திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரில் இருந்து அச்சனம்பட்டிக்கு  சென்ற அரசு பேருந்து, பயணி களை ஏற்றி சென்று கொண்டிருக்கும்  போது பாதி வழியில் பழுதடைந்தது.  பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பல முறை முயன்றும் இயங்காததால் பயணிகளை இறக்கிவிட்டு, வேட சந்தூர் போக்குவரத்து பணி மனைக்கு தகவல் கூறினார். பணிமனையில் கிரேன் வாகனம்  இல்லாததால், அருகில் இருந்த விவ சாய டிராக்டர் மூலம் கயிற்றில் கட்டி  பேருந்து இழுத்து கொண்டு செல்லப்பட்டது. இதன் காட்சி களை பொதுமக்கள் வீடியோ எடுத்து  சமூக வலைதளங்களில் பகிர்ந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு பேருந்தின் டயர் கழன்று சென்ற சம்பவம் நடந்  தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், பொதுமக்கள், வேடசந்தூர் பகுதியில் பழு தில்லாத அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரி க்கை விடுத்துள்ளனர்.