மீன்சுருட்டி அண்ணாநகரில் 55 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை மக்களின் வீடுகளை அகற்றுவதா?
அரியலூர், அக்.15 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தை அடுத்து மீன்சுருட்டி - காட்டுமன்னார் குடி சாலை அண்ணாநகர் பகுதியில் 55 ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களின் வீடுகளை இடிக்க வந்த வருவாய்த் துறை மற்றும் காவல்துறை யினரை தடுத்து நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வீடுகளை இடிக்க கூடாது; அவ்வாறு இடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மூதாட் டிக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். குடியிருக்க வீடு கட்டித் தர வேண்டும் எனக் கோரி, சிபிஎம் மீன்சுருட்டி கிளைச் செய லாளர் இந்திரா காந்தி தலைமையில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, டி. அம்பிகா, ஆர்.ரவீந்திரன், பி.பத்மாவதி, இ. மைதீன்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.பரமசிவம், தா.பழூர் ஒன்றியச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ.அருண் பாண்டியன், திருமானூர் ஒன்றியச் செயலா ளர் எஸ்பி.சாமிதுரை மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், “மாற்றுத்திறனாளி பெண்ணுடன் வசித்து வரும் ஏழை மூதாட்டி வெள்ளையம்மா ளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும். தற்போது அவர்கள் தங்குவதற்கு வீடுகள் ஏதும் இல்லாத நிலை யில், கால அவகாசம் கொடுப்பதுடன் மாற்று இடத்தை வழங்கிவிட்டு இந்த இடத்தை அகற்றிக் கொள்ள வேண்டுமென” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் சம்பத், மூதாட்டி வெள்ளையம்மாளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.