tamilnadu

img

இந்திய முறை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா? மூன்று மாதத்தில் இறுதி உத்தரவு: நீதிமன்றம்

மதுரை:
இந்திய முறை மருத்துவர்களும், அலோபதி மருத்துவர்களைப் போல பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.  நகராட்சி நிர்வாக ஆணையரின் பரிந்துரையை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் 3 மாதத்திற்குள் பரிசீலித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானிமருத்துவர்கள் 15 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில்,” நாங்கள் இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானியில் பட்டம்பெற்றுள்ளோம். கடந்த 1989-ஆம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டோம். கடந்த 1996-ஆம் ஆண்டுமாநகராட்சி பணி விதிகளின் படி பணியாற்றுகிறோம். இந்தியமருத்துவ முறையின் கீழ் நியமிக்கப்படுவோருக்கு இதுவரை பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை.

 கடந்த 26.11.2010-ஆம் ஆண்டு வெளியான நகராட்சி நிர்வாக அரசாணையில் அலோபதிமருத்துவர்களுக்கு ஊதியஉயர்வுடன் கூடிய காலமுறைபதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இதுபோல் எதுவும் வழங்கப்படவில்லை. நாங்களும் அதே நிலையில் மருத்துவர்களாக பணியாற்றுகிறோம். எனவே, எங்களுக்கும் ஊதிய உயர்வுடன் கூடியகாலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கைவைத்தோம். நகராட்சி நிர்வாக ஆணையர் எங்களது கோரிக்கைகுறித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.ஆனால், அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியமுறை மருத்துவர்களும், அலோபதி மருத்துவர்களும் ஒரே விதமான சம்பளம் பெற்றோம். ஆனால், தற்போது அவர்கள் மட்டும் அதிகளவில் சம்பளம்பெறுகின்றனர். பத்தாண்டுகளுக்கும்  மேலாகபதவி உயர்வின்றி, மிகக் குறைந்தசம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். பலர் 25 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையரின் பரிந்துரையை தகுதி மற்றும் முன்னுரிமைஅடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் மூன்று மாதத்திற்குள் பரிசீலித்து இறுதிஉத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரத்தை மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

;