வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தருமபுரி, ஆக.21- காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்முடி (45). இவர் கடந்த ஆக.18 ஆம் தேதி இரவு, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, மாரண்ட அள்ளி காவல் நிலை யத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்டது. போலீசார் காவல் நிலையம் முழுவதும் சோதனை செய்தும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இதையடுத்து, குஜ்ஜாரஅள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தப்பியோடிவிட்டார். அவர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், மாரண்ட அள்ளி பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணை யில், அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசு வேன் என்றும், அதேபோல் வெடிகுண்டு வைத்திருப்பதா கக்கூறியதை ஒப்புகொண்டார். இதையடுத்து, போலீசார் பொன்முடியை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
காட்டுப்பன்றி வேட்டை: 7 பேருக்கு அபராதம்
சேலம், ஆக.21- வாழப்பாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரகம், காரிப்பட் டியை அடுத்த ஜல்லூத்து வடக்கு வனப்பகுதியில் காட்டுப் பன்றியை ஒரு கும்பல் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப் பாட்டு தருமபுரி பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரபி அறிவுறுத்தலின் படி, சேலம் வன மண்டல வனப் பாது காப்புபடை உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன், வனச் சரகர் சுரேஷ்குமார், வனச்சரக அலுவலர் (பொ) க.சிவகுமார், வனவர் சின்னத்தம்பி ஆகியோர் ஜல்லூத்துமலை நடுப்பட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டுப் பன்றியை ஜல்லூத்துமலை நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு, ராஜ்குமாா், காளியப்பன், அண்ணாமலை, நடே சன், இளையராஜா, மற்றொரு அண்ணாமலை ஆகிய 7 பேரும் சேர்ந்து வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த வாழப் பாடி வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவழக்கு பதிவுசெய்து 7 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1,75,000 அபராதம் விதித்தனர்.