tamilnadu

img

1 கோடி மகளிர்க்கு உரிமைத் தொகை

சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று(மார்ச் 27) நிதிநிலை அறிக்கை மீது  மூன்றாவது நாளாக விவாதம் நடை பெற்றது. அப்போது, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பாராட்டி பேசிய பாமக சட்டமன்ற குழுத் தலைவர்  ஜி.கே. மணி,“ இந்த தொகை கிடைக்கா தவர்கள் நிலை என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண் களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்து  இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் அவர்கள் உழைத்து இருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு இருந்தால், இந்நேரம் நம்  நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்தி லும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, பிரதிபலன் பாராமல்  வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பு க்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மை யானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம்  ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண் களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறு துணையாக இருக்க வேண்டும் என்ப தாகும் என்றார்.

யாருக்கெல்லாம் உரிமைத்தொகை?

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீ கரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப் படும் குடும்பத் தலைவிகள் அனை வருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ  மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரி யும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங் களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என  பல்வேறு வகைகளில் தங்கள் விலை மதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். இதனைச் செய்ய முடியுமா; இதற்கு  நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்வி களை எழுப்பி, இந்த அரசு இதனைச் செய்துவிடுமோ என்று சிலர் தங்கள் அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வந்தனர். இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் அமைந்திடும். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறி தேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியை இந்த அரசு கைவிட்டு விடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.
 

;